Fengal cyclone Updates: சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக் காற்று, கனமழையுடன் உலுக்கிய ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் புயல், மேற்குத் தொடா்ச்சி மலையைக் கடந்து கா்நாடகம், கேரளம் வழியாக அரபிக் கடலுக்குச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதும் சென்னையில் மழை நின்றது. ஆனால், காற்று அதிகமாக வீசத்தொடங்கியது. அதேபோல செங்கல்பட்டு […]